சுசித்ராவுக்காக மன்னிப்பு கேட்டார் கணவர் கார்த்திக்..!


கடந்த சில தினங்களாக பாடகியும், நடிகையுமான சுசித்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய டுவிட்டுகளை பதிவு செய்துவந்தார். அதில் தனுஷின் ஆட்களால் தான் காயம் அடைந்ததாகவும், தன் கணவர் கார்த்திக்கை பிரிந்து விட்டதாகவும் தொடர்ந்து டுவீட் செய்துகொண்டே இருந்தார்.

இது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சுசித்ராவின் கணவர் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். அதில் சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த டுவீட்டுகள் அனைத்தும் அவர் பதிவு செய்தது அல்ல. அவரது டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்து இது போன்ற காரியத்தில் ஈடுபட்டுள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் சுசித்ராவுக்கும் அந்த டுவீட்டுகளுக்கும் சம்பந்தமில்லை. தற்போது டுவிட்டர் கணக்கை திரும்ப பெற்று விட்டோம். சுசித்ரா டுவிட்டர் பக்கத்தில் பதிவான டுவீட்டுகளால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கார்த்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Response