சேரன் டைரக்சனில் நடிக்கிறார் விஜய்சேதுபதி..?

1990களில் சிறந்த இயக்குனராக சேரன் திகழ்ந்தார். அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்களாக அமைந்தன. இயக்குனர் சேரன் கடைசியாக இயக்கிய படம் ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை‘ இந்தப்படம் தமிழில் சரியாக போகாவிட்டாலும் தெலுங்கில் நல்ல வெற்றி பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் சேரனை ‘தர்மதுரை‘ படத்தின் வெற்றி அவரை யோசிக்க வைத்துள்ளது. அவருடைய நெருங்கிய நண்பர்களான அமீர் உள்ளிட்டவர்களும் தர்மதுரை போன்ற படங்களுக்கு இன்றும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதை சுட்டி காட்டியுள்ளார்களாம்.

மேலும் சேரனின் பலமே அவர் குடும்ப உறவுகளை கையாண்டு எடுக்கும் படங்கள் தான் என உணர வைத்திருக்கிறார்கள். அதனை தொடர்ந்து தன்னிடம் இருந்த கதை ஒன்றினை நடிகர் விஜய் சேதுபதியிடம் கூறினாராம்

கதை பிடித்துப்போய்விட, விஜய்சேதுபதியும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response