மு.க.ஸ்டாலினுக்கு வக்கீல் நோட்டீஸ் – அமைச்சர் அனுப்பினார்

ரூ.1 கோடி மான நஷ்டஈடு கேட்டு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு பொதுப்​பணித்​துறை அமைச்​சர்
ஆதவ் அர்ஜுனா வழக்​கறிஞர் அறிவிக்கை அனுப்​பி​யுள்​ளார்.

சில நாட்களுக்கு முன்பு அமலாக்​கத்துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பை சுட்​டிக்​காட்​டி,ரூ.258 கோடி மதிப்​பிலான போதைப்பொருள் கடத்​தலில் மூளை​யாகச் செயல்​பட்ட ஜான்பிரிட்​டோ,தவெக அரசின் பொதுப்​பணித்​துறை
அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா​வின் நெருங்​கிய உறவினர் என்ற அதிர்ச்​சி​யூட்​டும் உண்மை அம்​பலா​மாகி​யுள்​ளது என திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின்,கட்​சி​யின் சமூகவலைதளப் பக்​கத்​தில் பதி​விட்​டிருந்​தார்.

இது தனது நற்​பெயருக்குக் களங்​கம் விளை​விப்​ப​தாகக் கூறி ஆதவ் அர்​ஜுனா தரப்​பில் திமுக தலை​வர்
மு.க.ஸ்டா​லினுக்​கும்,திமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவுக்​கும் வழக்​கறிஞர் அறிவிக்கை அனுப்​பப்​பட்​டுள்​ளது.

ஆதவ் அர்​ஜுனா சார்​பில் வழக்​கறிஞர்​கள் ஏ.பி.சூரியபிர​காசம்,ஆர்​.மோகன் பார்த்​த​சா​ரதி ஆகியோர் அதை
அனுப்​பி​யுள்​ளனர்.

அதில்…

அமலாக்​கத் துறை செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்ள ஜான்பிரிட்டோ எனது உறவினர் அல்ல.இது சம்​பந்​த​மாக எனது உறவினர் ஜான்பிரிட்டோ ஊடகங்​களில் விளக்​கம் அளித்​துள்​ளார்.திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட பதிவுக்கு நிபந்​தனையற்ற மன்​னிப்பு கேட்கவேண்​டும்.
ரூ.1 கோடிமான நஷ்டஈடு வழங்கவேண்​டும்.தவறி​னால் குற்​ற​வியல் மற்​றும் உரிமை​யியல் சட்ட நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படும் எனக் கூறப்​பட்​டுள்​ளது.

இது அரசியலரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Response