மனம் பதைக்கிறது வடவரை உடனே வெளியேற்றுங்கள் – பெ.ம ஆவேசம்

பால் குடிக்கும் பெண் குழந்தை பாலியல் படுகொலை! வெளியார் வெள்ளத்தை வெளியேற்றுக! என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

கடந்த 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம்,கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுப்பேட்டையில் 2½ வயதுப் பெண் குழந்தை 19 வயது மனிதவிலங்கால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகி மிகுதியான இரத்தப்போக்கால் அக்குழந்தை இறந்துவிட்டது.இச்செய்தி நம் தலைக்குள் இடிபோல் விழுந்துள்ளது.

பெண் குழந்தையும் பீகாரி!அந்த மனிதப்பிசாசும் பீகாரி என்கிறார்கள்.யாராக இருந்தாலும் அந்தச் சிறுகுழந்தைக்கு நேர்ந்த சித்திரவதையும் சாவும் தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தை – மனப்பதைப்பைத் தருகின்றன.

அந்த மனிதப்பிசாசைக் கைது செய்து விட்டார்கள்.அது தண்டிக்கப்படலாம் என்பவை எல்லாம் நம் மனப்பதைப்பைக் குறைக்கவில்லை!

பொதுவாகத் தமிழ்நாட்டில் கொலைகள் – பாலியல் வன்கொடுமைகள்,கொள்ளைகள்,வன்முறைகள் பெருத்துவிட்டன என்றாலும்,வடமாநிலத்தவர்களின் மிகை ஆக்கிரமிப்பால் தமிழ்நாட்டில் அன்றாடம் அதிகரித்து வரும் மேற்படிக் குற்றச்செயல்கள் அதிகம்! திருவள்ளூர் மாவட்டத்திலும்,திருப்பூர்,கோவை மாவட்டங்களிலும் வெளிமாநிலத்தவர்களின் – இந்திக்காரர்களின் குற்றச்செயல்கள் மிகமிக அதிகம்.

அதனால், கும்மிடிப்பூண்டி மக்கள் மேற்படிக் குழந்தையின் படுகொலைச் செய்தி வந்தவுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தி,இந்திக்காரர்களை வெளியேற்றுங்கள் என்று முழக்கமிட்டார்கள்.சமாதானம் பேசவந்த அரசு அதிகாரிகளிடம் வடவரை வெளியேற்றும் கோரிக்கைகளை முதன்மைக் கோரிக்கையாக வைத்தனர்.

எமது தமிழ்த்தேசியப் பேரியக்கம்,வெள்ளம்போல் வெளிமாநிலத்தவர் மிகை எண்ணிக்கையில் அன்றாடம் தமிழ்நா்டில் வந்து தங்குவது – வேலை பார்ப்பது என்பது,பல்வேறு சிக்கல்களை உருவாக்கும்;மொழி இன அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மிகை எண்ணிக்கையில் அயல் இனத்தார் வந்து,வேலை பார்ப்பது, இங்கேயே நிரந்தரமாகத் தங்குவது பல்வேறு சிக்கல்களை – குற்றச்செயல்களை – பண்புக்கேடுகளை உருவாக்கும். மண்ணின் மக்களாகிய தமிழர்களின் வாழ்வுரைிமையைப் பறிக்கும் என்றும் எச்சரித்து வருகிறது.

இந்தச் சிறுகுழந்தை பாலியல் படுகொலை செய்யப்பட்டதைக் கணிடித்து அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும்,பா.ச.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையும் மிகை எண்ணிக்கையில் வடமாநிலத்தவர் குவிய அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பளவு விகிதத்திற்குப் பொருந்தாத அளவில் மிகையாக இங்கு ஒரு சதுர கிலோ மீட்டரில் மக்கள் வசித்து வருகிறார்கள்.இந்தி மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் ஒரு சதுரகிலோமீட்டரில் சராசரியாக வசிக்கும் மக்கள் தொகை அதிகம்!

எனவே,தமிழ்நாடு அரசு இதில் தனிக்கவனம் செலுத்தி,மிகை வெள்ளமாய் வெளியார் தங்கியுள்ள பகுதிகளில் இருந்து அவர்களைத் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டு்ம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.உடனடியாக போர்க்கால அடிப்படையில் இப்பணியைச் செய்யுமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response