
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா முதலமைச்சர் விஜய்யின் உதவியாளர் பற்றி வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
அவர் இதுகுறித்துக் கூறியதாவது….
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஒரு ஆள் இருக்கிறார்.அவர் சமூக ஊடகங்களில் கும்பல்களை உருவாக்கிப் பெண்களைப் பற்றித் தவறாகப் பேசுகிறார்.சினிமாவில் நடிக்கத் துடிக்கும் பெண்களுக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி, அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகிறார் அந்த நபர்.
சமூகவலைதளங்களில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகம் நடக்கின்றன.நாங்கள் ஆளுங்கட்சியினர் அல்ல.ஒருவரது வாழ்வையும் அழிக்க விரும்பும் கட்சியும் அல்ல.முதலமைச்சரின் கீழ் பணிபுரியும் ஒருவர், இணையதளங்களில் பெண்களைப் பற்றி அவதூறு பரப்புகிறார். அவர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். சினிமா கனவுகளுடன் வரும் பெண்களுக்குப் பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு தருவதாகப் பொய் கூறிப் பலரின் வாழ்க்கையைத் தறிகெட்டுப் போகச் செய்துள்ளார்.
அவரது பெயரை நேரடியாகச் சொல்ல விரும்பவில்லை.நீங்கள் கேட்பதால்’மிஸ்டர் ஜெ’ என்று சொல்கிறேன். பெண்கள் பலரும் அந்த ‘ஜெ’ என்ற நபரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் ஒரு மாஃபியா அமைப்பை நடத்தி வருகிறார். கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்களுக்குப் பெரிய வாய்ப்புகளைத் தருவதாகக் கூறிப் பலரின் வாழ்க்கையைச் சிதைத்துவிட்டார்.எனது சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு பெண்,பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரைப் போன்றவர்களின் தொல்லைகளால் அந்தப்பெண் தனது ஊருக்கே சென்றுவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த அரசின் ஒரு மாதச் செயல்பாடுகளில் நான் எதையும் சாதனையாகக் காணவில்லை.3000 கோடி ரூபாய் செலவழித்துச் சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பரப்பும் மக்கள் தாக்கப்படுகிறார்கள்.
எல்லா மாநிலங்களிலும் குற்றங்கள் நடக்கும்,ஆனால் ஆளுங்கட்சி அதை எப்படிச் சமாளிக்கின்றது என்பதே முக்கியம்.திமுக ஆட்சிக்காலத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மிக வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும்.
ஆனால்,தற்போதைய முதலமைச்சர் தனது முதல் ஆறுமாதக் காலத்தை’ஹனிமூன் பீரியட்’ என்று கருதி,அதன்பிறகே நடவடிக்கை எடுப்பார் போலத் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விஜய்யின் உதவியாளர் மீது வெளிப்படையாக இப்படிக் குற்றம் சாட்டியிருப்பது அரசியலங்கிரலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


