பிரபாஸின் மெழுகுச்சிலை தயாராகிறது..!


ராஜமெளலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ படத்தின் வசூல் உலக திரையுலகினரை ஆச்சர்யப்பட வைத்தது. அமிதாப் பச்சனில் தொடங்கி அனைவருமே இப்படத்தைப் பாராட்டி புகழ்ந்தார்கள். இந்தியளவில் சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. உலகளவில் சீனா உட்பட பல்வேறு நாடுகளில் வெளியாகி அங்கும் தனது முத்திரை பதித்தார் பிரபாஸ்.

இப்போது ‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தும் விதமாக உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இவர் நடித்த பாகுபலி கதாபாத்திர சிலை நிறுவப்படவுள்ளது. 2017ம் ஆண்டு பேங்காக்கில் நடக்கவுள்ள மேடம் டுசாட்ஸ் நிகழ்வுக்காக பிரபாஸின் மெழுகு சிலை வடிவமைக்கப்படுவது அவரது கிரீடத்தில் செருகப்படும் இன்னொரு மயிலிறகு என்பதில் சந்தேகம் இல்லை.

Leave a Response