ஸ்டண்ட் கலைஞர்களுக்காக மத்திய அமைச்சரை சந்தித்த ஐஸ்வர்யா..!


சினிமாவில் உள்ள ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு வருடம் தோறும் தேசிய விருது வழங்கி வருகிறது. ஆனால் ஒரு சில துறைகளுக்கு இந்த விருது வழங்கப்படுவது இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக நிஜ ஹீரோக்களான சினிமா ஸ்டன்ட் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதில்லை என்பது கொஞ்சம் வருத்தம் கலந்த நிதர்சனம்.

சினிமா ஸ்டன்ட் கலைஞர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஐஸ்வர்யா தனுஷ் இந்த பாகுபாடை களையும் விதமாக, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்து சினிமா ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை ஒன்றை வைத்தார்.

ஐஸ்வர்யாவின் இந்த செயலால் ஸ்டண்ட் மாஸ்டர்கள் மற்றும் ஸ்டன்ட் கலைஞர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஸ்டண்ட் கலைஞர்களை பற்றி ‘சினிமா வீரன்’ என்கிற ஆவணப்படம் ஒன்றையும் இயக்கிவருகிறார் ஐஸ்வர்யா தனுஷ். சினிமாவின் நிஜ ஹீரோக்களான சண்டைக்கலைஞர்களை பற்றி பேசும் ஆவண படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பின்னணி பேசுகிறார்.

Leave a Response