
தூத்துக்குடி-இராமேஸ்வரம் சாலையில் கீழ அரசடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குக்கு, 10 பேருடன் வந்த கஞ்சா, மது போதை கும்பல், கட்டை மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அங்குள்ள ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இச்செயல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,இதைக் கண்டித்தும் வன்முறையாளர்கள் மீது உடனடி நடவடிக்கை கோரியும் அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்….
தூத்துக்குடி- இராமேஸ்வரம் சாலையில் கீழ அரசடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கை, 10 பேருடன் வந்த கஞ்சா,மது போதை கும்பல், கட்டை மற்றும் கத்தி,அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அங்குள்ள ஊழியர்களைத்
தாக்கியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் வேதனையளிக்கிறது.மக்களை அச்சுறுத்தி,சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
பெட்ரோல் பங்க் அருகே சிறுநீர் கழித்தவர்களைத் தட்டிக்கேட்டதற்காக இந்தக் கொடூரத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்கும்வரை சமூக விரோத செயல்கள் நடைபெறுவதைத் தடுக்க இயலாது.
எனவே,தமிழக மக்களின் பாதுகாப்பையும்,இளம் சமுதாயத்தினரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
தூத்துக்குடி இராமேஸ்வரம் சாலையில் கீழ அரசடி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கை தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


