
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற சசிகலாவின் முயற்சி தோல்வி அடைந்ததால் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்டார் சசிகலா.
இத்தேர்தலில் இதுவரை வந்த விவரங்கள்படி சசிகலாவால் அதிமுக தோற்ற விவரங்கள்…
முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுகவுக்கும், திமுகவுக்கு இடையே வித்தியாசம் 20,502 வாக்குகள். இதில், சசிகலா கட்சி 40,422 வாக்குகள் பெற்றதால் அதிமுக தோல்வி அடைந்தது.
உசிலம்பட்டியில் தவெக வேட்பாளர் அதிமுகவை 1,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் சசிகலா கட்சி வேட்பாளர் அய்யப்பன் 16,620 வாக்குகளை பிரித்ததால், அதிமுக தோல்வியைத் தழுவியது.
மேலூர் தொகுதியில் காங்கிரசு வேட்பாளர் பெ.விஸ்வநாதன் 58,419 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக 57,361 வாக்குகள் பெற்று இரண்டாமிடமும் அதிமுக வேட்பாளர் பெ.பெரியபுள்ளான் 56,744 வாக்குகளுடன்
மூன்றாம் இடமும் பெற்றனர்.இதில் சசிகலா கட்சி வேட்பாளர் சோனியாகாந்தி 2,628 வாக்குகளைப் பிரித்ததால், அதிமுக தோல்வியைத் தழுவி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு பின்னடவைச் சந்தித்தது.
சாத்தூரில்,தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 56,071 வாக்குகள் பெற்றார்.ஆனால்,எதிர்த்துப்
போட்டியிட்ட திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் 62,060 வாக்குகள் பெற்று 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இங்கு சசிகலாவின் அஇபுமமுக 11,602 வாக்குகளைப் பிரித்ததால்,நயினார் நாகேந்திரன் சுமார் ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.


