
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.இதனால் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.
இதற்காக,தமிழ்மக்களை இனப்படுகொலை செய்த சிங்கள வெறியன் மகிந்த ராஜபக்சவின் மகனும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ச,விஜய்க்கு வாழ்த்துச் செய்தி கொடுத்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது….
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோசப் விஜய் சந்திரசேகருக்கு வாழ்த்துகள். மக்களுக்குத் தேவையான பயனுள்ள திட்டங்களைச் கொண்டு சேர்க்க உங்களுக்கும், உங்களது குழுவினருக்கும்
மன வலிமையும்,துணிச்சலும் கிடைக்க வாழ்த்துகள்.
மேலும், இரு நாட்டு மக்களையும் பாதிக்கும் பல்வேறு முக்கிய விவகாரங்களில், இலங்கையுடன் வலுவான
மற்றும் ஆக்கப்பூர்வமான உறவை வளர்த்தெடுக்க புதிய தலைமை வழிவகுக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய்க்கு இனப்படுகொலைக் குற்றவாளி நமல் ராஜபக்ச வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பது ஈழத்தமிழ் மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பேரரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
நமலுக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு? விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தது எதனால்? தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்பவருக்கு மரியாதை நிமித்தமான வாழ்த்து என்றால், இதுபோல் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்ததில்லையே? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.


