
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய், தனது பிறந்தநாளை ஜூன் 22 அன்று கொண்டாடினார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வந்த முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் அவரது பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாடினர்.
அக்கட்சியினர் சார்பில் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தவெகவினர் வழங்கினர்.இரத்த தானம்,அன்னதானம்,மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட
நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
முதல்வரின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பிரதமர் மோடி,மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்,முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில்,திரைத்துறையில் நடிகராக இருந்து,இன்று முதல்வர் ஆகியுள்ள முதல்வர் விஜய்க்கு,அவரது பிறந்தநாள் அன்று நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடிய படத்தை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்றும் பதிவிட்டுள்ளார் நடிகை த்ரிஷா.
இது சமூகவலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஏற்கெனவே விஜய் மனைவி,ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்று சொல்லித்தான் மணவிலக்குக் கேட்டிருக்கிறார்.
இந்நிலையில்,நடிகை த்ரிஷாவின் இந்தப்பதிவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் நடிகையுடன் தமிழக முதல்வர் கொண்டாட்டம்,இது சரியா? முறையா? என்கிற விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் நிறைந்து கிடக்கிறது.


