
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றது.இந்தத் தேர்தலில் 108 இடங்களை தவெக கைப்பற்றியுள்ளது.ஆனாலும் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்பதால்,விஜய் ஆட்சி அமைப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.அதன்படி,உதிரிக் கட்சிகள் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார்.
திமுக 59 இடங்களில் வெற்றிபெற்று தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது.47 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக 3 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரசு 5 இடம், விடுதலைச் சிறுத்தைகள் 2 இடம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 இடம், மார்க்சிய கம்யூனிஸ்ட் 2 இடம், இந்திய கம்யூனிஸ்ட் 2 இடம், தேமுதிக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாமக 4 இடம், பாஜக 1 இடம், அமமுக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிமூலம் தவெக 34.92 விழுக்காடு வாக்குகளும், திமுக 24.19 விழுக்காடு வாக்குகளும், அதிமுக 21.21 விழுக்காடு வாக்குகளும் பெற்றுள்ளன.
தவெக 1,70,62,084 ஓட்டுகள் பெற்று 34.96 விழுக்காடும், திமுக கூட்டணிக் கட்சி 1,54,07,967 ஓட்டுகள் பெற்று 31.57 விழுக்காடும், அதிமுக கூட்டணிக் கட்சி 1,32,84,090 ஓட்டுகள் பெற்று 27.22 விழுக்காடும், நாதக 19,49,367 ஓட்டுகள் பெற்று 3.99 விழுக்காடும் பெற்றுள்ளன.
மேலும் திமுக கூட்டணியை விட தவெக 16,54,117 ஓட்டுகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


