நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு எதிராக வாக்களிப்பு – அதிமுக முடிவு

அதி​முக மீண்டும் பிளவுபட்டுள்ளது.இப்போது அக்கட்சியின் பொதுச்​செய​லா​ளராக இருக்கும்
எடப்பாடி பழனிச்​சாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி,சி.வி.சண்முகம் உட்பட பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆதரவாளர்களுடன், தலை​மைச் செயல​கத்​தில்
பேர​வைத் தலைவர் ஜேசிடி பிர​பாகரனை நேற்று சந்​தித்​தார்.
அப்​போது,பல்​வேறு நீதி​மன்றத் தீர்ப்​பு​களை மேற்​கோள்காட்டி விளக்​கி,தன்​னைத்​தான் பேரவை அதி​முக தலை​வ​ராக நியமிக்க வேண்​டும் என்​றும்,எஸ்​.பி.வேலுமணி அளித்த கடித்தை ஏற்​கக்​கூ​டாது என்​றும் கோரிக்கை விடுத்​தார்.

அதைத் தொடர்ந்து எடப்பாடி அணியைச் சேர்ந்த முன்​னாள் அமைச்​சர் ஓ.எஸ்​.மணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது….

எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதாகல் கூறப்படுவது முழுக்க முழுக்க அவதூறு. திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறுவது அரசியல் இலாபத்திற்காகத் திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்.திமுகவும் அதிமுகவும் என்றைக்கும் எதிர்க்கட்சிகளாகவே செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்​தில் 4 ஆண்​டு​கால சிறப்​பான ஆட்​சியை நடத்தி மக்​களின் பாராட்டைப் பெற்​றவர் எடப்பாடி பழனிச்சாமி. தேர்​தலில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் 1.35 கோடி வாக்​கு​களைப் பெற்​று, கூட்​ட​ணி​யுடன் 53 இடங்​கள், தனித்து 47 இடங்​களை வென்று கொடுத்​தார்.

எடப்பாடிக்கு ஆதரவாக 26 எம்எல்ஏக்கள் கடிதம் வழங்கியுள்ளனர்.அந்த ஆதரவின் அடிப்படையில்தான் சட்டமன்ற கொறடா உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 47 எம்எல்ஏக்கள் ‘எடப்பாடி பழனிச்சாமியே சட்டமன்றக் குழுத் தலைவர் எனக் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர். அதிமுகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கே உள்ளது.பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து சி.வி.சண்முகம் பேசியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து.கூட்டணி தொடர்பான முடிவுகளை அறிவிக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது.சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பேசும் கருத்துகளுக்கு பின்னால் அமைச்சர் பதவி ஆசை இருக்கிறது.

இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராகவே அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.அதனை மீறி யாரேனும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும்,தூய்மையான ஆட்சி வழங்குவேன் என்று கூறி வரும் முதல்வர் விஜய்,சி.வி.சண்முகம் தரப்பின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கமாட்டார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்​னாள் அமைச்​சர் அக்ரி கிருஷ்ண​மூர்த்தி கூறும்​போது…

அதி​முக பொதுச்​செய​லா​ளர் ஆணைக்​கிணங்க, பேர​வை​யில் நம்​பிக்கை கோரும் தீர்​மானத்​துக்கு எதி​ராக அதி​முக வாக்களிக்​கும்.அது தொடர்​பாக அனைத்து அதி​முக எம்​எல்​ஏக்​களுக்​கும் தகவல் அனுப்​பப்​பட்​டுள்​ளது.இந்த
உத்​தரவை மீறி வாக்​களிப்​பவர்​கள் மீது சட்டரீதி​யாக நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​றார்.

Leave a Response