சோதிடருக்கு அரசுப்பணி கொடுத்த விஜய் – பெ.சண்முகம் எதிர்ப்பு

நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் எந்த மாற்றமும் இல்லாமல் பல நியமனங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.அவற்றில் ஒன்றாக விஜய்யின் சோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டுக்கு அரசாங்கப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.அவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்றாக, தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம் எதிர்ப்பும் இருக்கிறது.

அவர்,
அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.

அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். “ஜோதிடம் தனை இகழ்” என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல!

இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலும் இந்த நியமனத்தை எதிர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response