
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி…விஜய்யின் தவெக 108 இடங்களைப் பிடித்துள்ளது.அதற்கடுத்து திமுக கூட்டணி 73 இடங்களில் வென்றுள்ளது.இவற்றில் திமுக மட்டும் 59 இடங்களில் வென்றுள்ளது. அக்கூட்டணியில் காங்கிரசு 5,விடுதலைச் சிறுத்தைகள் 2, இந்திய பொதுவுடைமைக் கட்சி 2, இந்திய பொதுவுடைமைக் கட்சி மார்க்சிஸ்ட் 2,
ஐ யு எம் எல் 2,தேமுதிக 1 ஆகிய இடங்களைப் பிடித்திருக்கின்றன.
அதிமுக கூட்டணி 53 இடங்களில் வென்றிருக்கிறது. அவற்றில் அதிமுக மட்டும் 47 இடங்களிலும் அன்புமணி பாமக 4 இடங்களிலும் அமமுக மற்றும் பாஜக தலா ஓரிடத்தையும் கைப்பற்றியுள்ளன.
இவற்றில்,தவெக தலைவர் விஜய், பெரம்பூர்,திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.அவற்றில் ஒன்றிலிருந்து அவர் விலகியாக வேண்டும்.
அதேபோல் அதிமுகவில் வெற்றி பெற்றிருக்கும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் வென்றுள்ளார். இவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். இரண்டில் ஒரு பொறுப்பைத்தான் அவர் வைத்திருக்க முடியும்.இப்போது அவர் எதை வைத்துக்கொள்வார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அவர் மாநிலங்களவை உறுப்பினராக 2022 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.எனவே,அந்தப் பொறுப்பில் இன்னும் இரண்டாண்டுகள்தாம் இருக்கமுடியும்,சட்டமன்ற உறுப்பினர் என்றால் ஐந்தாண்டுகள் இருக்கின்றன.எனவே அவர் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை வைத்துக் கொள்வார் என்று சொல்லப்படுகிறது.


