111 நாள் போர் 122 இலட்சம் கோடி இழப்பு – முடிவுக்கு வந்தது

அமெரிக்​கா – ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே கடந்த பிப்​ர​வரி 28 ஆம் தேதி முதல் போர் நடை​பெற்று வந்​தது. கடந்த ஏப்​ரல் 8 ஆம் தேதி இருதரப்​பும் இணைந்து தற்​காலிகப் போர்நிறுத்​தத்தை அமல் செய்​தன.ஆனால் தற்​காப்பு நடவடிக்கை என்ற பெயரில் இருதரப்​பும் அவ்​வப்​போது தீவிர தாக்​குதல்​களில் ஈடு​பட்டு வந்​தன.பாகிஸ்​தான்,
கத்​தார் உள்​ளிட்ட நாடு​கள் இருதரப்புக்குமிடையே சமரசமுயற்​சிகளில் ஈடு​பட்​டன.இதன்​காரண​மாக அமெரிக்கா ஈரான் இடையே சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்​டது.

சுவிட்​சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் ஜூன் 19 ஆம் தேதி அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று
அறிவிக்​கப்​பட்​டது.இந்தச் சூழலில் ஒரு​நாள் முன்​ன​தாகவே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தாகியுள்​ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அரு​கே​யுள்ள வெர்​சாய் அரண்​மனை​யில் அமெரிக்க அதிபர் ட்ரம்​புக்கு நேற்று விருந்து அளிக்​கப்​பட்​டது.அப்​போது அவர் மின்​னணு முறை​யில் அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டார்.இதே​போல ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் இருந்​த​படி அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் மின்​னணு முறை​யில் அமைதி
ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டார்.

இதுகுறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில்….

வரலாற்றுச் சிறப்​புமிக்க அமைதி ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்டுள்​ளேன்.உலக அமை​தி,பிராந்​திய அமை​தியை நிலை​நாட்​டு​வ​தில் ஈரான் உறு​தி​யாக இருக்​கிறது என்று தெரிவித்துள்ளார்.

சமரச தூதர் என்ற வகை​யில் அமெரிக்​கா,ஈரான் அமைதி ஒப்​பந்​தத்​தில் பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் மின்​னணு முறை​யில் கையெழுத்​திட்​டார்.அவர் சமூகவலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது….

அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தாக ஆக்​கப்​பூர்​வ​மான பங்​களிப்பை வழங்​கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,துணை அதிபர் ஜே.டி.​வான்​ஸ்,சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்​காப்,ஜெராட் குஷ்னர்,ஈரான் உச்ச தலை​வர் மொஜ்தபா கமேனி,ஈரான் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப்,வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்​சி,உள்​துறை அமைச்​சர் எஸ்​கந்​தர் மொமேனி ஆகியோ​ருக்கு நன்​றி.
சமரச முயற்​சிகளில் ஈடு​பட்ட கத்​தார்,சவுதி அரேபி​யா,துருக்​கி,எகிப்து நாடு​களின் தலை​வர்​களுக்​கும் பாகிஸ்​தான் இராணுவ தளபதி அசிம் முனீருக்​கும் நன்​றியை உரித்​தாக்​கு​கிறேன்.

இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா – ஈரான் ஆகிய நாடுகளிடையே நடந்த போரால் 111 நாட்​கள் நீடித்த பதற்​றம் தற்​போது முழு​மை​யாகத் தணிந்​திருக்​கிறது.

குறிப்​பாக சவுதி அரேபி​யா,ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட வளை​குடா நாடு​களின் மக்​கள் நிம்​மதிப் பெரு​மூச்சு விடு​கின்​றனர்.போர் காரண​மாக இது​வரை ரூ.122 இலட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது.
உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய்,எரி​வா​யு,உரங்​களுக்கு கடுமை​யான தட்​டுப்​பாடு ஏற்​பட்டுள்​ளது.பல்​வேறு
நாடு​களின் பொருளா​தா​ரம் முழு​மை​யாகச் சீர்​குலைந்​திருக்​கிறது.பங்​குச்சந்​தைகள் கடும்வீழ்ச்சி அடைந்துள்​ளன. உரத்தட்​டுப்​பாட்​டால் பல்​வேறு நாடு​களில் உணவுப்பஞ்​சம் ஏற்​படும் அபாய​மும் எழுந்​திருக்​கிறது.அமைதி ஒப்​பந்​தம்​ காரண​மாக அனைத்​து பிரச்​சினை​களுக்​கும்​ சுமுகத்தீர்​வு காணப்​பட்​டுள்​ளது என சர்​வதேச பொருளா​தார நிபுணர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

Leave a Response