அமெரிக்கா ஈரான் இடையே பாகிஸ்தானில் இன்று சமாதான பேச்சுவார்த்தை – வெற்றி பெறுமா?

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இராணுவம் இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலை​யில், இருதரப்​பினரும் பங்​கேற்​கும் அமை​திப் பேச்​சு​வார்த்தை பாகிஸ்​தான் தலைநகர்
இஸ்​லா​மா​பாத்​தில் இன்று நடை​பெறுகிறது.

இதில் பங்​கேற்க அமெரிக்க துணைஅதிபர் ஜே.டி.​வான்ஸ் தலை​மையி​லான குழு​வினர் பாகிஸ்​தான்
விரைந்​துள்​ளனர்.ஈரான் தரப்​பில் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப், வெளி​யுறவு அமைச்​சர்
அப்​பாஸ் அராக்சி உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர்.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்படைகள் மற்​றும் ஈரான் இராணுவத்​துக்கு இடையே பிப்​ரவரி 28 ஆம் தேதி முதல் போர் நடை​பெற்று வந்த நிலை​யில்,ஏப்ரல் 8 ஆம் தேதி தற்​காலிக போர்​நிறுத்​தம் அமலுக்கு வந்​தது.

அதன் தொடர்ச்​சி​யாக, பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமெரிக்​கா, ஈரான் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​கும் அமை​திப் பேச்​சு​வார்த்தை இன்று நடை​பெறுகிறது.

இதில், அமெரிக்கா தரப்​பில் துணைஅதிபர் ஜே.டி.​வான்​ஸ்,சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப்,அதிபர் ட்ரம்​பின் மரு​மகன் ஜெராட் குஷ்னர் ஆகியோ​ரும்,ஈரான் தரப்​பில் அந்தநாட்டு நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப், வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்​சி, வெளி​யுறவு துணைஅமைச்​சர் மஜித் தக்த் ரவஞ்சி ஆகியோ​ரும்
பங்​கேற்​கின்​றனர்.

சமரச தூதர்​களாக பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இராணுவ தளபதி அசிம் முனீர், வெளி​யுறவு அமைச்​சர் இஷாக் டார் ஆகியோர் செயல்பட உள்​ளனர்.

பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்க, அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் நேற்று சிறப்பு விமானத்​தில் இஸ்​லா​மா​பாத் புறப்​பட்​டார்.அப்போது, ஈ​ரானுடன் பேசவேண்​டிய விவ​காரங்​கள் குறித்து அதிபர் ட்ரம்ப் தெளி​வான வழி​காட்​டு​தல் வழங்​கி​யுள்​ளார்.அதன்​படி பேச்​சு​வார்த்தை நடத்​து​வேன்.எங்​களோடு ஈரான் விளை​யாட முயன்​றால் மோச​மான விளைவு​கள் ஏற்​படும் என்று அவர் கூறி​னார்.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் வெளி​யிட்​டுள்ள சமூக வலை​தளப் பதி​வில், லெப​னான் மீது இஸ்​ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்​குதல் நடத்திவரு​கிறது. இது போர்​நிறுத்த ஒப்​பந்த மீறல் ஆகும். தாக்​குதலை உடனே நிறுத்தவேண்​டும்.நாங்​கள் மீண்​டும் துப்​பாக்​கியைத் தூக்கத் தயங்கமாட்​டோம்.எந்தச் சூழலிலும் லெப​னான்
மக்​களைக் கைவிட​மாட்​டோம் என்று தெரி​வித்​துள்​ளார்.

இருதரப்பும் இப்படி முறுக்கிக் கொண்டு நிற்பதால் இன்றைய சமாதான பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. சமாதானம் ஏற்பட வேண்டும் போர் நிரந்தரமாக நிற்கவேண்டும் என உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Leave a Response