
திருப்பரங்குன்றம் வழக்கில்,தொல்லியல்துறை ஆய்வு செய்து அறிவித்த கல்தூணில் விளக்கேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியிருப்பதற்கும்,இந்த வழக்கைச் சரியாகக் கையாளத விஜய் அரசுக்கும் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்துக் கூறியிருப்பதாவது….
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினை அரசு செயல்படுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அரசிற்கு அறிவுரையாக கூறியிருந்தேன்.
அதேபோல்,உச்சநீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திருப்பரங்குண்றம் மலைப்பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எப்-வசம் ஒப்படைத்துள்ளது.அறங்காவலர் குழுவையே கலைத்து,திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது.
உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ள சில சொற்களை நான் சுட்டிக்காட்ட விழைகிறேன்-
“Administrative Chaos, brazen and wilful disobedience, flagrant disregard, calculated affront of both Constitutional Courts” (நிர்வாகக் குழப்பம், அப்பட்டமான மற்றும் வேண்டுமென்றே செய்யப்படும் கீழ்ப்படியாமை, அப்பட்டமான அலட்சியம், இரு அரசியலமைப்பு நீதிமன்றங்களையும் திட்டமிட்டு அவமதித்தல்)
மேலும், “The prevailing situation needed to be dealt with an iron hand, failing which it could lead to CONSTITUTIONAL CHAOS” (நிலவும் சூழ்நிலையை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டும், தவறினால் அது அரசியலமைப்பு ரீதியான குழப்பத்திற்கு வழிவகுக்கும்) என்று கூறியுள்ளது.
இதுபோன்ற வார்த்தைகளை ஒரு அரசு நோக்கி இவ்வளவு காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை.
இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழக சட்டத்துறைக்கே அழிக்கமுடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ள ஆச்சரியக்குறி தவெக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சட்டம்,அரசியலமைப்புஉச்சநீதிமன்றம் – இவையெல்லாம் மாண்புக்குரியவை.அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் Windmill, Car பொம்மைகளைப் போல அல்ல என்பதை
நடிகர் விஜய் உணரவேண்டும்.
இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண இந்த வாடகைக்கால் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


