கடலூர் சிறையில் கள்ளக்குறிச்சி சமஉ – விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு,கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

எதிர்க்கட்சிகள்,தேசிய மகளிர் ஆணையம்,நீதிமன்றம் ஆகியன இச்சிக்கலில் தலையிட்டு நடவடிக்கை கோரியதால் சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர் மீது வழக்குப் பதியப்பட்டது.

பாலியல் துன்புறுத்தல், பாலியல் சாயல் கொண்ட கருத்துகளை தெரிவித்து துன்புறுத்தல், பின் தொடர்ந்து துன்புறுத்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், தமிழ்நாடு மகளிர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நவம்பர் 24 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அதுதொடர்பாக விசாரணைகளும் நடந்தன.

இந்நிலையில் நேற்றைய தினம் (நவம்பர் 27,2026) அவர் கைது செய்யப்பட்டார்.அதன்பின் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அவருக்கு, டிசம்பர் 11 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. உத்தரவுப்படி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆளும்கட்சியான நடிகர் விஜய்யை தலைவராகக் கொண்ட தவெகவைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தமிழ்நாடு அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave a Response