விஜய்க்கு அதிமுக ஆதரவா? எதிர்ப்பா? – இருவேறு கருத்துகளால் குழப்பம்

தமிழ்நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய்​யின் தவெக 108 இடங்​களி​லும், திமுக கூட்​டணி 73 இடங்​களி​லும், அதி​முக கூட்​டணி 53 இடங்​களி​லும் வெற்றி பெற்​றுள்​ளன. ஆட்சி அமைக்​கத் தேவை​யான 118 இடங்​கள்
தவெக​வுக்குக் கிடைக்​க​வில்​லை.

தவிர, பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்ள விஜய் இதில் ஏதேனும் ஒரு
தொகு​தி​யில் பதவி விலகவேண்​டும். இதனால், தவெக பலம் 107 ஆகக் குறை​யும். இந்தச் சூழலில்,
பெரும்​பான்​மையை நிரூபிக்க இன்​னும் 11 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்​படு​வ​தால், அதி​முக​வுடன் தவெக தரப்பு தீவிர பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​வ​தாகச் சொல்லப்படுகிறது.இதற்கு எடப்பாடி பழனிச்சாமி உடன்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இதனால், அதி​முக​வில் இருந்து 20 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக​வுக்கு ஆதரவு அளிப்​பார்​களா? என்று
எஸ்​.பி.வேலுமணி​யிட​மும், பின்​னர் சி.​வி.சண்​முகத்​திட​மும் செங்​கோட்​டையன் தரப்​பில் பேச்​சு​வார்த்தை
நடந்​த​தாகக் கூறப்​படு​கிறது.அமைச்​சர் பதவி வழங்​கு​வ​தாக​வும் வாக்​குறுதி அளித்​த​தாகத் தெரி​கிறது.

இதையறிந்த எடப்பாடி பழனி​ச்சாமி தனது ஆதர​வாளர்​களு​டன் தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டுள்​ளார்.அதி​முக
சார்​பாகவே நேரடி​யாக தவெக​வுக்கு ஆதரவு தரலாம் என்ற முடிவுக்கு அவர் வந்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.
இதனால் கட்​சி​யின் புதிய சட்டமன்ற உறுப்பினர்​கள் கூட்​டத்தை எடப்பாடி பழனி​ச்சாமி இன்று கூட்​டி​யுள்​ளார். தவெக​வுக்கு ஆதரவு தரு​வது தொடர்​பாக இக்​கூட்​டத்​தில் முக்​கிய முடிவு எடுக்​கப்​படும்​ எனத் தெரிகிறது.

இந்தச் சூழலில்,திருச்சி லால்​குடி தொகு​தி​யில் அதிமுக சார்பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற
லீமா ரோஸ் மார்ட்​டின் சென்னையில் எடப்பாடி பழனி​ச்சாமியைச் சந்​தித்து வாழ்த்துப் பெற்​றார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் லீமா ரோஸ் கூறிய​தாவது….

லால்​குடி​யில் நான் (அதி​முக), வில்​லி​வாக்​கத்​தில் எனது மரு​மகன் ஆதவ் அர்​ஜுனா (தவெக), புதுச்​சேரி
காம​ராஜ் நகரில் எனது மகன் ஜோஸ் சார்​லஸ் மார்ட்​டின் (லஜக) என்று ஒரே குடும்​பத்​தில் 3 பேர் வெற்றி பெற்று சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் ஆகி​யிருப்​பது மகிழ்ச்​சியைக் கொடுக்​கிறது.
இது இறைவன் கொடுத்த பரிசு ஆகும்.எங்​கள் குடும்​பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் வெற்றி பெறு​வோம் என்று நாங்​கள் எதிர்​பார்க்​க​வில்​லை.இது எங்​களுக்கு இன்பஅதிர்ச்​சி​யாக அமைந்​துள்​ளது.தவெக​வுக்கு பெரும்பான்மை
இல்​லாத​தால்,ஆதரவு அளிப்​பது தொடர்​பாக அதி​முக – தவெக இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. விரை​வில் பேச்​சு​வார்த்தை நல்​லபடி​யாக முடி​யும் என்று நினைக்​கிறேன்.

இவ்​வாறு அவர்​ கூறினார்.

இந்த நிலையில்,எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த வேதாரண்யம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டியில்….

தமிழ்நாட்டில் அதிமுகதான் பெரிய கட்சி.இந்தச் சூழலில் தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது என்றார்.

ஒரேநேரத்தில்,ஒரேகட்சியைச் சேர்ந்தவர்களால் இப்படி நேரெதிரான கருத்துகள் சொல்லப்பட்டிருப்பதால் அதிமுக வட்டாரங்களில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

Leave a Response