
தமிழ்நாடு அரசின் வளர்ச்சிப் பணிகளை வேகப்படுத்தவும்,நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும்,அவசரகாலப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும்,
மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், அவசரகாலப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும், மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம்:
விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் – என்.ஆனந்த்,
சென்னை, திருவண்ணாமலை – ஆதவ் அர்ஜுனா,
மயிலாடுதுறை – வெங்கட ரமணன்,
திருவள்ளூர் – ரா.குமார்,
திருநெல்வேலி – மரியவில்சன்,
பெரம்பலூர் – ராஜ்மோகன்,
காஞ்சிபுரம் – க.தென்னரசு,
திருப்பத்தூர் – ஆர்.வி.ரஞ்சித் குமார்,
செங்கல்பட்டு – த.சரத் குமார்,
கள்ளக்குறிச்சி – வன்னிஅரசு,
ராணிப்பேட்டை – வ.காந்திராஜ்
தருமபுரி, அரியலூர் – ப.ராஜ்குமார்,
நாகை – ஏ.எம்.ஷாஜகான்,
தஞ்சை – வினோத்,
திருச்சி – ரமேஷ்,
கரூர் – சி.விஜயலட்சுமி,
நாமக்கல் – த.லோகேஷ் தமிழ்ச்செல்வன்,
திருப்பூர் – கே.ஜி.அருண்ராஜ்,
நீலகிரி – செ.கமலி,
வேலூர் – ம.விஜய் பாலாஜி,
ஈரோடு – கே.ஏ.செங்கோட்டையன்
கோவை – வே.சம்பத்குமார்,
மதுரை, தேனி – நிர்மல்குமார்,
புதுக்கோட்டை – ஜா.முகமது பர்வேஸ்,
சிவகங்கை – டி.கே.பிரபு,
கிருஷ்ணகிரி – எஸ்.கீர்த்தனா,
விருதுநகர் – கு.ஜெகதீஸ்வரி,
திருவாரூர் – பெ.விஸ்வநாதன்,
தூத்துக்குடி – ஶ்ரீநாத்,
இராமநாதபுரம் – பெ.மதன்ராஜா,
சேலம் – விஜய் தமிழன் பார்த்திபன்,
கன்னியாகுமரி – செ.ராஜேஷ்குமார்,
தென்காசி – ராஜீவ்,
திண்டுக்கல் – க.விக்னேஷ்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதில்,விழுப்புரம் மாவட்ட அமைச்சர் வன்னிஅரசுவை கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்ததற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.
அவர் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது….
அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கும், ஒன்றுக்கு மேற்பட்டோர் இருந்தால் பிற மாவட்ட அமைச்சர்கள் பொறுப்பளிப்பதும் சரி,ஆனால் 7 தொகுதியுள்ள விழுப்புரம் மாவட்ட அமைச்சர் வன்னி அரசு அவர்களை 4 தொகுதியுள்ள கள்ளக்குறிச்சிக்கு நியமனம் சரியா?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


