இலண்டன் அருங்காட்சியகத்தில் முதன்முறையாக தமிழரின் மெழுகுச் சிலை

இலண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகம் உலகப் புகழ் பெற்றது. அங்கு ஒருவரது மெழுகுச்சிலை இடம்பெறுவது சம்பந்தப்பட்டவருக்கு மிகப்பெருமை.

அரசியல்தலைவர்கள் திரைத்துறை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புகழ்பெற்றவர்களது சிலைகள் அங்கே இடம் பெற்றிருக்கின்றன.

இந்தி நடிகர்கள் ஷாருக்கான்,சல்மான்கான், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் போன்றோரின் மெழுகுச்சிலை அங்கே வைக்கப்பட்டுள்ளது.

இந்தவரிசையில்,நடிகர் சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரம், இலண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது.

தமிழ் நடிகரான சத்யராஜ், இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் என சினிமா பட்டாளமே நடிப்பில் உருவான பாகுபலி படத்தின் முக்கிய கதாபாத்திரம் மற்றும் திருப்புனையை ஏற்படுத்துவதுமாக இருப்பது கட்டப்பா கதாபாத்திரம்.

இதை, சத்யராஜ் ஏற்று நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பைக் கண்டு இவருக்கு இந்திய அளவில் மிகப் பெரிய பெயர் கிடைத்தது.

இந்தப் பெருமை தற்போது உலகளவில் இடம்பெற உள்ளது. சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரம், இலண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சிகத்துக்குச் செல்லும் முதல் தமிழரின் சிலை சத்யராஜின் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response