ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜப்பானில் கிடைத்த அங்கீகாரம்..!


‘ரெமோ’ படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது போல, படத்தின் வியாபாரமும் பிரமாண்டமாகவே நடைபெற்று வருகிறது.. ரிலீசிற்கு முன்னதாகவே சுமார் ரூ.32 கோடிவரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது இன்னுமொரு சாதனைக்கு சொந்தக்கரனாகியுள்ளார் ‘ரெமோ’ சிவகார்த்திகேயன்..

வரும் அக்டோபர்-7ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தை ஜப்பானில் வெளியிடும் உரிமையை ‘மெட்ராஸ் மூவிஸ்’ எனும் நிறுவனம் பெற்றுள்ளது. ரஜினி படங்களை தவிர்த்து மற்ற அனைத்து நடிகர்களின் படமும் ஜப்பானில் உள்ள யொகோயமா (Yokoyama) மற்றும் டோக்கியோ (Tokyo) ஆகிய இரண்டே ஏரியாக்களில் மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் முதன் முறையாக, ரஜினிக்கு அடுத்து நகோயா (Nagoya) எனும் மூன்றாவது ஏரியாவில் வெளியாகும் படம் ‘ரெமோ’ தான்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘ரஜினி முருகன்’ சிவகார்த்திகேயனின் ராசி ஜோடியான கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் சதீஷ், யோகிபாபு, சரண்யா, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் மிகவும் ஹைலைட்டான அம்சமே சிவாகார்த்திகேயன் பெண் வேடத்தில் அதுவும் நர்சாக நடித்துள்ளதுதான்.

Leave a Response