அமரன் டீசர் அபத்தம் – ஒரு பார்வை

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் அமரன். இப்படத்தின் டீசர் எனப்படும் குறுமுன்னோட்டம் நேற்று வெளியானது.

அதுகுறித்த பார்வை….

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்பட டீசர் பார்த்ததில், 25ஏப்ரல் 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்புடனான தாக்குதலின் போது மரணம் அடைந்ததாக அறியப்பட்டு, 2014 ஆம் ஆண்டு பிஜேபி அரசு (மே மாதம்) பதவி ஏற்ற முதல் ஆண்டில், அசோக சக்ரா (ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு) விருது வழங்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனைப் போற்றும் விதமாக படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

பாசிச வாதிகளின் இந்த 10 ஆண்டுகளை அனுபவிக்கும் போதே,தீவிரவாத்தில் ஈடுபடும் இஸ்லாமியர்கள், சிறுவர்கள் கையில் துப்பாக்கி, அமெரிக்கா அரசால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவனுடைய அமைப்புக்கு எதிரான ஆப்ரேஷன்’ என ஆண்டவர் (கமல்பஹாசன்) பணம் போட்டு படம் எடுக்கிறார் என்றால் சந்தேகமாவும் எரிச்சலாகவும் வருகிறது.

உண்மையில் இராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்க படம் எடுக்க விரும்பினால், அக்னிபாத் திட்டத்தை வைத்து தான் எடுக்க வேண்டும். அதுக்கு திராணி இல்லாம
விருதுக்கும் வியாபாரத்துக்கும் அபத்தமா காட்சிப்படுத்துறானுக.

பாவம்யா இந்தியாவுல உள்ள இஸ்லாமியர்கள், சக மனுஷன் அவனுகள பாக்குற பார்வை, அதிகாரத்தின் துணையோட அவனுக மேல அன்றாடம் நடக்குற வன்முறைன்னு நிம்மதியா ஒரு நாள் கூட வாழமுடியாம இன்னும் போராடிகிட்டு இருக்கானுக.

இந்தியாவ விட்டு பிரியணும்னு சொல்ற இஸ்லாமியர்கள தீவிரவாதியா காட்டி ஈசியா படம் எடுக்க முடியிற உங்களால, ‘இந்தியா தான் எல்லா’ம்னு நம்ம கூடவே வாழ்ற இஸ்லாமியர்கள பார்த்து ‘பாகிஸ்தான் போடா’னு சொல்றவனுகள தீவிரவாதியா காட்டி விமர்சிச்சு படம் எடுக்க முடியலயே ஏன்?

– மில்டன்

Leave a Response