வெயிட்டை குறைத்த அனுஷ்காவுக்கு வெயிட்டான கேரக்டர் தரும் இயக்குனர்..!


கடந்த சில மாதங்களாகவே ஐதராபாத்திலுள்ள தனது வீட்டிலேயே நவீன ஜிம் ரெடி பண்ணி, தற்போது கணிசமான அளவு வெயிட் குறைத்து வருகிறார் அனுஷ்கா. அந்த போட்டோக்களை அவர் வெளியிட்டபோதுதான், தனது மல்டி ஹீரோ படத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க முடிவு செய்தாராம் கௌதம் மேனன்.

ஏற்கனவே, கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா. ‘துருவ நட்சத்திரம்’ படத்தை அடுத்து கௌதம் மேனன் இயக்கவிருக்கும் மல்டி ஸ்டார் படத்தில் அனுஷ்காவை வழக்கமான டூயட் பாடும் நாயகியாக இல்லாமல், ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறாராம்.

Leave a Response