மூன்று மொழிகளில் தயாராகும் அனுஷ்காவின் ‘பாகமதி’..!


பாகுபலி இரண்டாம் பாகத்துக்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளிவர இருக்கிற படம் பாகமதி. ஹாலிவுட் தரத்தில் உருவாகும் இந்த த்ரில்லர் படம். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. சுமார் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வம்சி கிஷ்ணா ரெட்டி தயாரிக்கிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சித்ரங்கடா படத்தை இயக்கிய ஜி.அசோக் இயக்குகிறார்

இதில் அனுஷ்காவுடன் அதிதி பினிஷெட்டி, ஜெயராம், உன்னி முகுந்தன். ஆஷா சரத் ஆகியோர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார். அனுஷ்காவின் பிறந்த தினத்தையொட்டி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. படத்தை தமிழில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா வெளியிடுகிறார். ஜனவரியில் படம் வெளிவருகிறது

Leave a Response