ஆர்யா ஹீரோவாக நடிக்கும் ‘கஜினிகாந்த்’..!


நடிகர் ஆர்யாவை பொறுத்தவரை தற்போது இறங்குமுகத்தில் தான் இருக்கிறார். அவர் என்னதான் கடுமையான உழைப்பை தந்தாலும் ‘மீகாமன்’, ‘கடம்பன்’ போன்ற படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இந்தநிலையில் தான் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஞானவேல்ராஜா வெளியிட்டுள்ளார். இந்தப்படத்திற்கு ‘கஜினிகாந்த்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோகிரீன் தயாரிப்பில் ஆர்யாவுக்கு இது முதல் படம்… ஆர்யாவுக்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயிஷா சைகல் நடிக்கிறார். பாலமுரளி என்பவர் இசையமைக்கும் இந்தப்படத்தை ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்குகிறார்.

Leave a Response