மீண்டும் இணைந்த ‘வெள்ளக்காரன்’ கூட்டணி..!


‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை தயாரித்து நடித்த விஷ்ணு, அதை தொடர்ந்து அனைத்துத்தரப்பு ரசிகர்களும் வந்து பார்க்கும் வகையிலான கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார்.. அந்தவகையில் இந்த வெள்ளக்காரன் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளது.

ஆம்.. எழில் டைரக்சனில் மீண்டும் நடிக்கிறார் விஷ்ணு விஷால். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, காமெடி வேடங்களில் யோகிபாபுவும் மொட்ட ராஜேந்திரனும் கலக்க உள்ளார்கள். இமான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். சிவாஜியின் பேரன் துஷ்யந்த் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் மூலம் நான்ஸ்டாப் காமெடிக்கு உத்தரவாதம் தந்த இயக்குனர் எழில்-விஷ்ணு விஷால் கூட்டணி இந்த புதிய படத்திலும் அதே மாயாஜாலத்தை நிகழ்த்தும் என நம்பலாம்.

Leave a Response