பாகுபலி நாயகனுக்கு ‘சாஹோ’ டீமின் பிறந்தநாள் பரிசு..!


‘பாகுபலி 2’ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது ‘சாஹோ’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். நாயகியாக ஷ்ரதா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

‘பாகுபலி’ படத்தைப் போலவே, இப்படமும் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. இந்தநிலையில் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு சுஜித் ‘சாஹோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு அவரது பிறந்தநாள் பரிசாக வெளியிட்டுள்ளார்கள். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Leave a Response