சாமி-2வில் இருந்து த்ரிஷா விலக காரணம் இதுதான்..!


இயக்குனர் ஹரியின் சிங்கம் படத்தின் மூன்று பாகங்களையும் ரசித்து பார்த்தவர்களுக்கு மிகவும் பிடித்துப்போன ஒரு விஷயம் மூன்று படத்தின் முக்கியமான ஆட்களை அவர் மாற்றவே இல்லை… அதுதான் படத்துடன் ரசிகர்களை அதிகம் ஒன்ற வைத்தது.

அதேபோலத்தான் சாமி படம் வெளியாகி சுமார் பதினான்கு ஆண்டுகள் ஆன பின்னரும் ‘சாமி-2’விலும் விக்ரம் ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த த்ரிஷா நடிப்பாரா என கேள்வி எழுந்தது. அதன்பின் த்ரிஷா நடிக்கிறார் என்பது உறுதிசெய்யப்பட்டது. இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமானார்.

இந்தநிலையில் தான் சாமி 2’ படத்தில் இருந்து த்ரிஷா திடீரென விலகியுள்ளார். இந்த தகவலை த்ரிஷாவும் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் கேரக்டரை விட த்ரிஷாவின் கேரக்டரின் முக்கியத்துவம் குறைவாக இருந்ததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் த்ரிஷாவின் இந்த முடிவுக்கு அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Leave a Response