த்ரிஷாவுடன் குடும்பம் நடத்துகிறாரா விஜய்? – நயினார் பேச்சால் சர்ச்சை

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை திருச்சி புறப்பட்டார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்….

மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை,மத்திய அரசு முடக்குவதாகக் கூறுவது பொய். கரூரில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில், 41 பேர் உயிரிழந்தனர். இன்று சேலத்தில் நடந்த அதேகட்சியின், மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய்,முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.திரிஷாவிடம் இருந்து வெளியே வர வேண்டும்.அப்போதுதான் எல்லாம் நடக்கும்.குடும்பங்களோடு நல்ல உறவு வைக்க வேண்டும். நல்ல தலைவர்கள் வழிநடத்திய இயக்கங்கள் பற்றி நல்ல முறையில் பேசவேண்டும். முதலில் அவர் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.களத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவர் விஜய்.கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? ஒரு காலமும் முடியாது.

இதுதான் விஜய்க்கான பதில். விஜய் தனக்கு 32 சதவீதம் வாக்கு இருக்கிறது என எப்படிக் கூற முடியும்? அவர் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்.விஜய் எல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது.கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது.விஜயகாந்திற்குக் கூடாத கூட்டமா? இவருக்குக் கூடி விட்டது.நானும் அனுமான் போல், மலையைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியும் என கூறலாம். ஆனால் அதைச் செய்ய முடியுமா? விஜய்யால் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் பேட்டியில், விஜய் நடிகை த்ரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் சொல்லியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.விஜய் தன் மனைவியை விட்டுவிட்டு த்ரிஷாவுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று வந்துகொண்டிருக்கும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை உறுதிப்படுத்துவது போல் நயினார் நாகேந்திரன் பேட்டி அமைந்திருப்பதால் இந்த சர்ச்சை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response