காங்கிரசில் இணைகிறார் ஜி.கே.வாசன்?

பாசக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்​ட​ணி​யில் பல ஆண்​டு​களாகப் பயணித்து வரும் தமிழ்மாநில
காங்​கிரசு,2019 மக்​களவைத் தேர்​தலில் ஒரு தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தோல்​வியைத் தழு​வியது.பின்​னர்,அதி​முக ஆதர​வுடன் ஜி.கே.​வாசன் மாநிலங்​களவை உறுப்பினர் ஆனார்.

2021 சட்​டப்​பேரவைத் தேர்​தலிலும் அந்தக் கூட்​டணி தொடர்ந்த நிலை​யில்,6 இடங்​களில் தமாகா போட்​டி​யிட்டு தோல்வி அடைந்​தது.2024 மக்​களவைத் தேர்​தலில் பாசக கூட்​ட​ணி​யில் இருந்து அதி​முக வெளி​யேறிய போதும், தமாகா கூட்​ட​ணி​யில் நீடித்​தது.அந்தத் தேர்​தலில் 3 இடங்​களில் சைக்​கிள் சின்​னத்​தில் தமாகா போட்​டி​யிட்டு தோல்வி அடைந்​தது.

சமீபத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலில் தேசிய சனநாயகக் கூட்​ட​ணி​யில் 5 இடங்​களில் தாமரை
சின்​னத்​தில் போட்​டி​யிட்ட தமாகா அனைத்​தி​லும் தோல்​வியைத் தழு​வியது.

இந்​நிலை​யில்,தேர்​தல் தோல்வி மற்​றும் உள்​ளாட்சித் தேர்​தல் தொடர்​பாக தமா​கா​வின் மாநில நிர்​வாகி​கள், மாவட்டத் தலை​வர்​கள்,செயற்​குழு உறுப்​பினர்​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம்,கட்​சி​யின் தலை​வர்
ஜி.கே.​வாசன் தலை​மை​யில் எழும்​பூரில் நேற்று நடை​பெற்​றது.

இந்தக்கூட்​டத்​தில் அடுத்து வரு​விருக்​கும் உள்​ளாட்சித் தேர்​தலில் மாவட்ட ரீதி​யாக வெற்​றி​பெற என்ன தேவை? என்​பது குறித்து விவா​திக்​கப்​பட்​டது.தொடர்ந்து கட்​சி​யின் நிர்​வாக அமைப்பைச் சீரமைக்க ஜி.கே.​வாசனுக்கு முழு அதி​காரம்,தேர்​தல் முடிந்தநிலை​யில் தமாகா தனி நிலைப்​பாட்​டில் பயணித்​தல் உட்பட 8 தீர்​மானங்​கள்
நிறைவேற்​றப்​பட்​டன.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் ஜி.கே.​வாசன் கூறிய​தாவது….

தமிழகத்​தில் 60 ஆண்​டு​களுக்குப் பின்பு அரசி​யலில் யாரும் எதிர்​பா​ராத வகை​யில் புதிய ஆட்சி மலர்ந்​திருக்​கிறது.

2014 முதல் 2026 வரை தொடர்ந்து 12 ஆண்​டு​களில் நடந்த தேர்​தல்​களில்,கூட்​ட​ணி​களில் தமாகா பங்கு பெற்​றும், எங்​களது இலக்கை எங்​களால் அடையமுடிய​வில்​லை.குறிப்​பாக கடந்த 3,4 தேர்​தல்​களில் எங்​களது கூட்​ட​ணி​யும் எதிர்​பார்த்த வெற்​றியைப் பெற​வில்​லை.கூட்​ட​ணி​யில் இருக்​கும்போது கட்​சி​யின் பொறுப்​பாளர்​களுக்கு பொறுப்​பு​கள் குறைவ​தாக​வும்,கூட்​டணி அரசி​யலில் கட்​சி​யின் வளர்ச்சி குறைவ​தாக​வும் நிர்​வாகி​கள் கருதுகின்​றனர்.தேர்​தல் நேரத்​தில் கூட்​டணி அவசி​யம் என்​ப​தில் மாற்​றுக்​கருத்து கிடை​யாது.

அதே​நேரம் தேர்​தல் இல்​லாத நேரத்​தில் மாவட்டத் தலை​வர்​களும்,மாநில நிர்​வாகி​களும்,பொறுப்​பாளர்​களும்
தங்​களு​டைய கட்​சிப் பணிகளைப் பொறுப்​புணர்​வுடன் செய்​யக்​கூடிய நிலை ஏற்படவேண்​டும்.

அதற்கு உள்​ளாட்சித் தேர்​தல் வரும்வரை தமாகா தனித்​தன்​மையோடு செயல்படவேண்​டும் என நிர்​வாகி​கள்
விரும்​பு​கிறார்​கள்.அதனடிப்​படை​யில் மத்​தி​யில் பாசக,மாநிலத்தில் அதி​முக தலை​மையி​லான தேசிய சனநாயகக் கூட்​ட​ணி​யில் இருந்து தமாகா நட்பு கட்​சி​யாகவே வில​கு​கிறது.இனி எங்​களை வலுப்​படுத்தி கொள்ள நகரம் முதல் கிராமம் வரை மீண்​டும் கட்சிப் பணி​களை தீவிர​மாக மேற்​கொள்ள முடிவு செய்​துள்​ளோம்

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்து தவெக அல்​லது தி​முகவுடன் கூட்​டணி வைத்து,அடுத்து வரும் தேர்​தல்​களைச் சந்​திக்கலாம் எனத் திட்டமிட்டிருப்பதாகவும் அதன் காரணமாகவே கூட்டணியிலிருந்து வெளியேறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இன்னொருபுறம், தனிக்கட்சியை வெற்றிகரமாக நடத்தமுடியவில்லை என்பதால் தாய்க்கட்சியான காங்கிரசுடன் கட்சியை இணைத்துவிடலாம் என்று ஜி.கே.வாசன் எண்ணுவதாகவும் அதுதொடர்பான முயற்சிகளில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Response