பாஜக ஆர் எஸ் எஸ் கருத்தை ஏற்று அரசாணை வெளியிட்ட விஜய் – மக்கள் அதிர்ச்சி

தமிழ்நாடு அரசின்,இந்து சமய அறநிலை​யத்​ துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில்…

அறநிலை​யத் துறை சார்​பில் திருமண மண்​டபங்​கள்,வணிக வளாகங்​கள் கட்ட வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பு​கள்
நீதி​மன்றத் தடை​யாணை காரண​மாக​வும்,சம்​பந்​தப்​பட்ட கோயில்​களின் நிதிச்​சுமையை கருத்​தில் ​கொண்​டும்
தற்​போது சில நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளன.
அதன்​படி ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டு,தற்​போதுவரை தொடங்​கப்​ப​டாத ரூ.115.77 கோடி மதிப்​பீட்​டிலான 29 திருமண மண்​டபங்​கள் கட்டும் பணி​கள் மற்​றும் ரூ.130 கோடி மதிப்​பீட்​டிலான 17 வணிகவளாகங்​கள் கட்​டும்
பணி​கள் என மொத்​தம் ரூ.245.85 கோடி மதிப்​பீட்​டிலான 46 பணி​களுக்கான நிர்​வாக அனு​ம​தி​கள் இரத்து
செய்​யப்​பட்​டுள்​ளன.இந்த நிதியைக் கொண்டு கோயில்​கள் மற்​றும் பக்​தர்​கள் பயன்​பெறும் வகை​யில்
புதியதிட்​டங்​கள் அறிவிக்​கப்​படும்.

இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

கடந்த திமுக ஆட்சியில்,கோவில்களில் மூலம் கிடைத்து வரும் வருமானத்தை கோவில்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்ற விதியை மாற்றி,பல நூறுகோடி ரூபாய் உபரி நிதியை,அரசுக்குச் சொந்தமான மற்றும் நலிவடைந்து வரும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்ய முடிவுசெய்து,2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 17,2026 அன்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டது.

அதோடு,திருமண மண்டபங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதற்கு,பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.கோயில் நிதியை வேறு எந்த நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது என்பது அவர்களுடைய நிலைப்பாடு.

அவர்களுடைய நிலைப்பாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டு விஜய் அரசு,திமுக அரசு தொடங்கிய நலத்திட்டங்களுக்கு அனுமதியை இரத்து செய்திருப்பது வெகுமக்களுக்கு அதிர்ச்சியையும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ்காரர்களுக்கு மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது.

Leave a Response