அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர் ஜெ.எம்.பஷீர் அக்கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்….,
கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்குக் களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு(மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.எம்.பஷீர், கட்சி சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் திடீர் நீக்கத்துக்குக் காரணம், எடப்பாடி பழனிச்சாமி இஸ்லாமிய மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டார் அதை ஆதாரத்துடன் வெளியிடுகிறேன் என்றும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவிலிருந்து நீக்கவேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைப்பேன் என்றும் அவர் சொன்னதுதான் காரணம்.
இது மிண்டும் அதிமுகவில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
அதிமுகவில் இருந்து துரோகி பழனிசாமியை நீக்க வேண்டும் என்று திரு ஓபிஎஸ் அவர்களிடம் கோரிக்கை வைத்த அதிமுக சிறுபான்மையினர் பிரிவு துணைசெயலாளர் ஜெ.பஷீர் கட்சியிலிருந்து நீக்கம்.
ஓபிஎஸ் அவர்களை நீக்க வேண்டும் என்று கூறிவரும் ஜெயகுமாருக்கும் இந்த நடவடிக்கை பொருந்துமா?
என்று அதிமுகவின் ஒரு பகுதியினர் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்,