ஜூலை 10 – இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டியுள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 101.37 ரூபாய், டீசல் லிட்டர் 94.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 101.67 ஆகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ 94.39 ஆகவும் உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பது இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்தாலும் அரசாங்கங்கள் அவற்றைக் கண்டுகொள்ளவேயில்லை. இப்படியே விலையை உயர்த்திக் கொண்டே போனால் எங்கு போய் முடியுமெனெத் தெரியவில்லை என்று வேதனிப்படுகிறார்கள்.

Leave a Response