உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு குளறுபடிகள் – வெளிப்படுத்தும் வைகோ

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு இன்று வெளியானது. அதன்படி ஊராட்சிப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இது ஜனநாயகப் படுகொலை என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…

உள்ளாட்சித் தேர்தல் என்பது மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் அனைத்துக்கும் சேர்த்து நடத்தப்பட வேண்டிய தேர்தலாகும்.

ஆனால் தமிழ்நாடு அரசு ஊராட்சிகளுக்கு மட்டும் முதலில் தனியாக தேர்தல் நடத்துவதாக அறிவித்து இருப்பது உள்நோக்கம் கொண்ட வஞ்சகத் திட்டமாகும்.

தேர்தலையே தள்ளிப் போடுவதற்கhக நீதிமன்றங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கின்ற வகையில் ஏற்பாடு செய்துவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்துவது ஆளும் அரசாங்கத்தின் தந்திரம் நிறைந்த சூழ்ச்சியாகும் என்பதால், மாநில அரசின் இந்த அறிவிப்பைக் கண்டிப்பதோடு, புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் சேர்த்து வார்டுகள் பிரிவினை செய்யாமல், தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பைச் செய்திருப்பது திட்டமிட்ட ஏமாற்று வேலையாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response