
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பதும் சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,அந்த நான்கு தொகுதிகளிலும் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று அறிவித்தார்.
அதன்படி, மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், கடையநல்லூரில் தி.மு.ராஜேந்திரன், மொடக்குறிச்சியில் செந்தில்நாதன், சீர்காழியில் செந்தில்செல்வன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் பூமிநாதன்,இப்போது மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றில், மொடக்குறிச்சி,மதுரை தெற்கு,கடையநல்லூர் ஆகிய மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், சீர்காழி (தனி) தொகுதியில் தனிச் சின்னத்திலும் மதிமுக போட்டியிடவிருக்கிறது.
மேலும்.திமுக கூட்டணியில் இடம்பெற்று சிதம்பரம் தொகுதியைப் பெற்றிருக்கும், மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில்,அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்றும் நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.இவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அதேபோல,திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நாகை தொகுதியில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் அப்துல் சமதும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இவர்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு நன்னிலம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகுதியில்
வேட்பாளராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக் அறிவிக்கப்பட்டுள்ளார்.


