அழைப்பிதழில் பிரபாகரன் படம் இராகுல்காந்தி சொன்னதென்ன? – துரை வைகோ தகவல்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் திருச்சியிலிருந்து மதுரை வரையிலான சமத்துவ நடைபயண தொடக்க விழா திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் நேற்று நடைபெற்றது.

இந்த நடைபயணத் தொடக்க விழா​வில் தி​முக கூட்​ட​ணிக்கட்​சி​யினர் பங்கேற்ற நிலை​யில், கூட்​ட​ணி​யில் அங்​கம் வகிக்​கும் முக்​கிய கட்​சி​யான காங்கிரசுக் கட்சியினர் கலந்து கொள்ளவில்லை.

விழா அழைப்​பிதழில் விடுதலைப்புலிகள் தலைவர் பிர​பாகரன் படம் இடம் பெற்​றுள்​ளதால் காங்கிரசுக் கட்சி பங்கேற்கவில்லை என்று சொல்லப்பட்டது.எனினும், விழா மேடை மற்​றும் அப்​பகு​தி​யில் வைக்​கப்​பட்​டிருந்த பதாகை​களில் பிர​பாகரன் படம் இடம்பெற​வில்​லை.

இதுகுறித்து மதி​முக முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ கூறும்​போது, அழைப்​பிதழில் பிர​பாகரன் படம் இடம் பெற்​றது குறித்து தவறான தகவல்​களைச் சிலர் பரப்பி வரு​கின்​றனர்.

காங்கிரசுத் தலை​வர் இராகுல் காந்தி எனக்கு மிக​வும் நெருங்​கிய நண்​பர். அவரிடம் ஆங்​கிலப் புத்​தாண்​டுக்கு
வாழ்த்​துத் தெரி​வித்து நான் செல்​போனில் பேசி​ய​போது, ‘பிர​பாகரன் படம் இடம் பெற்​றது குறித்து இங்​குள்​ளவர்​கள் தவறாகப் புரிந்​து​ கொண்டு பேசுகிறார்​கள்’ என்​றேன்.

அதற்கு அவர், ‘அதைப்​பற்​றிக் கவலைப்பட வேண்​டாம். நீங்​கள் உங்​கள் பணி​களைப் பாருங்​கள்’ என்று கூறி​னார்.
தமிழ்நாடு தலைவர் செல்​வப்​பெருந்​தகை​யால்​ நிகழ்​ச்​சிக்​கு வரமுடிய​வில்​லை. திருச்​சி ​மாவட்​ட ​காங்கிரசு​
தலை​வர்​கள்​ வ​ராதது ஏன்? என்பது குறித்​து எனக்​குத்​ தெரிய​வில்​லை

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response