தங்கமோதிரம் திட்டம் – தகிக்கும் கேள்விகள்

அரசு மருத்​து​வ​மனை​களில் பிறக்​கும் குழந்​தைகளுக்கு தங்க மோதிரம் வழங்​கும் ‘தாய்​மாமன் தங்க மோதிரம்’
திட்​டத்தை முதல்​வர் விஜய் செப்​டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்​ளார். இத்​திட்​டத்​தின்​கீழ் தமிழகம் முழு​வதும் உள்ள அரசு மருத்​து​வ​மனை​களில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் பிறக்கும் ஒவ்​வொரு
குழந்​தைக்​கும் ஒரு கிராம் தங்க மோ​திரம் வழங்​கப்பட உள்​ளது.

முதல்​கட்​ட​மாக ஜூன் முதல் செப்​டம்​பர் வரையி​லான 4 மாதங்​களுக்கு 1,28,499 மோதிரங்​கள் கொள்​முதல்
செய்​யப்பட உள்​ளன. தமிழ்​நாடு மருத்​து​வப் பணி​கள் கழகத்​தால் (TNMSC) கடந்த ஜூலை 14 ஆம் தேதி
இத்​திட்​டத்​துக்​கான டெண்​டர் கோரப்​பட்​டது.

இதில் 11 முன்​னணி நிறு​வனங்​கள் பங்​கேற்​றன.தங்​கம் விலை​யைத் தவிர்த்​து, ஒரு மோதிரத்​துக்​கான செய்​கூலி, சேதா​ரம், காப்​பீடு, பேக்​கிங் மற்​றும் பிஐஎஸ் தரமுத்​திரை உள்​ளிட்ட அனைத்துச் செல​வு​களை​யும் நிறு​வனங்​கள் விலை​யாகக் குறிப்​பிட வேண்​டும் என்​பது டெண்​டர் நிபந்​தனை ஆகும்.

அதன்​படி வெறும் ஒரு பைசா என்ற மிகக்குறைந்த விலைப்​புள்​ளி​யில் தங்கமோதிரம் செய்து தரு​வ​தாக குறிப்​பிட்ட ஜாய் ஆலுக்​காஸ் நிறு​வனத்​துக்கு 70 சதவீத​ம்,அதே விலைக்கு செய்​துதர சம்​ம​தித்த கல்​யாண் ஜுவல்​லர்ஸ்
நிறு​வனத்​துக்கு 30 சதவீத​ம் என மோதிரங்​கள் தயாரிக்க டெண்​டர் வழங்​கப்​பட்​டுள்​ளது.

தற்​போதைய சந்தை சூழலில் வெறும் ஒரு பைசா செல​வில் தங்கமோதிரத்தை வடிவ​மைத்​துக் கொடுப்​பது
சாத்​தி​ய​மா? சாதா​ரண​மாக ஒரு கிராம் தங்​கம் வாங்​கும்​போதே செய்​கூலி, சேதா​ரம் என கணிச​மான தொகை வசூலிப்​பார்​கள். அரசு விதி​முறை​யின்​படி, ஒரு மோதிரத்​துக்கு பிஐஎஸ் ஹால்​மார்க் முத்​திரைக்கு மட்​டுமே
குறைந்​த​பட்​சம் ரூ.45 செல​வாகும்.அதுத​விர,பேக்​கிங்,போக்​கு​வரத்து செல​வு,காப்​பீடு போன்ற செல​வு​களை​யும்
வெறும் ஒரு பைசா​வில் எப்​படி ஈடு​கட்ட முடி​யும் என்ற கேள்வி​கள் எழுந்​துள்​ளன. பொது​வாக ஒரு கிராம் தங்க மோதிரம் தயாரிப்​ப​தற்​கான செய்​கூலி,சேதா​ரம் ரூ.1,050 வரை வரும்.இவ்வளவு நட்டத்தை ஏற்றுக்கொண்டு தங்கமோதிரம் செய்து தர அந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டதன் பின்னணியில் என்ன இருக்கிறது? என்கிற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது.

அதோடு,தமிழ்நாடு அரசின் தங்க மோதிரம் திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளியில் தங்கம் தவிர்த்து இதர செலவுகளுக்கு ரூ.978.50 ஏலத்தொகை கோரிய கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம்,எப்படி திடீரென 1 பைசாவுக்கு இறங்கி வந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Response