
கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். இப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அதில் நடிகர் ரகுமான் முன்னணி வேடத்தில் நடித்திருந்தார். தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரையே கூட திரும்பி பார்க்கவைத்தார் கார்த்திக் நரேன்.
இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப்படத்திற்கு ‘நரகாசூரன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அரவிந்த்சாமியின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்படத்தை கெளதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இந்தப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷண் ஸ்ரேயா, மலையாள நடிகரும் பிருத்விராஜின் அண்ணனுமான நடிகர் இந்திரஜித் ஆகியோர் நடிக்கின்றனர்.


