அரவிந்த்சாமி போல பெருந்தன்மை இருந்தால் பல தயாரிப்பாளர்கள் காப்பாற்றப்படலாம்.


அரவிந்த்சாமி, அமலாபால் இணைந்து நடித்துள்ள படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பாஸ்கர் தி ரஸ்கல் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப்படத்தை மலையாளத்தில் இயக்கிய இயக்குனர் சித்திக்கே இயக்கியுள்ளார். அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் சூரி, ரோபோ சங்கர், ஆஃப்தாப் ஷிவ்தசானி ஆகியோர் நடித்துள்ளனர்

“இப்படத்திற்கு அட்வான்ஸ் தொகை வாங்காமலேயே அரவிந்த்சாமி நடித்து கொடுத்தார்” என படத்தின் தயாரிப்பாளர் அதன் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார். இப்போது இருக்கும் நடிகர்களுக்கு இப்படி முன்பணம் வாங்காமல் அரவிந்த்சாமி போல நடித்துக்கொடுக்கும் பெருந்தன்மை இருந்தால் நிறைய தயாரிப்பாளர்கள் சிக்கலின்றி படம் தயாரிக்க முடியும். அவர்களும் தற்கொலை செய்வதில் இருந்து காப்பாற்றப்படலாம் என்பது உண்மை.

Leave a Response