ஒரே கதைக்கு இரு வேறு சான்றிதழ் தந்த சென்சார் போர்டு..!


பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இந்தப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இத்தனைக்கும் இது குழந்தைகளை மையப்படுத்தி உருவான குடும்பக்கதை தான்.

இதே படம்தான் மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் ‘பாஸ்கல் தி ராஸ்கல்’ என்கிற பெயரில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது மலையாளத்தில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டபோது யு சான்றிதழை பெற்ற நிலையில் தமிழில் மட்டும் எப்படி யு/ஏ சான்றிதழ் பெற்றது என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.

இப்படி யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் குழந்தைகள் இந்த படத்தை பெற்றோர்களுடன் இணைந்துதான் பார்க்க முடியும். 18 வயதுக்கு குறைவானவர்கள் தனியாக இந்த படத்தை பார்க்க முடியாது. தமிழுக்காக அமலாபாலை ஹீரோயினாக்கி கவர்ச்சி காட்சிகளை சேர்த்ததால் ஒருவேளை இப்படி சான்றிதழ் அளித்திருப்பார்களோ என்னவோ..?

Leave a Response