இந்திரஜித் முன்னோட்டம் எப்படி இருக்கிறது?

2013 ஆம் ஆண்டு வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்குள் நுழைந்தார் கவுதம்கார்த்திக். இயல்பிலேயே மிகவும் துடிப்புள்ளவரான அவர் நடிப்பில் இதுவரை ஏழு படங்கள் வெளியாகிவிட்டன. ஆனால் அவற்றில் இல்லாத ஒரு துடிதுடிப்பு இப்போது வெளியாகியிருக்கும் இந்திரஜித் படத்தின் முன்னோட்டத்தில் தெரிகிறது.

ஒரு நாயகனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று இயக்குநர் கலாபிரபுக்குத் தெரிந்திருக்கிறது.இப்படத்தின் முன்னோட்டம் பட வெற்றியின் முன்னோட்டமாகவே தெரிகிறது. கவுதம்கார்த்திக் தன்னுடைய எட்டாவது படத்தில் பெருவெற்றியை எட்டவிருக்கிறார்.

திரைப்படம் என்பது காட்சி ஊடகம் என்பதை முழுமையாகப் புரிந்திருக்கும் இயக்குநருக்குச் சரியான துணையாக ஒளிப்பதிவாளர் ராசாமதி கிடைத்திருக்கிறார். ராசாமதியின் கைவண்ணம் படத்தை உடனே முழுமையாகப் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது.

முன்னோட்டம் இதோ…

Leave a Response