எதையும் அவர் எதிர்கொள்வார் – பாஜக மிரட்டலைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் கருத்து

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென மோடி அறிவித்து ஓராண்டாகிவிட்டது. அதையொட்டி மோடி அறிவித்த (நவம்பர் 8,2016) அதே நவம்பர் 8,2017 அன்று அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, “தட்றோம் தூக்றோம்” என்ற தலைப்பில் ஒருபாடலைப் பாடி
வெளியிட்டிருந்தார். அந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் குரல் கொடுத்தவர் சிம்பு. பண மதிப்பு நீக்கத்தின் ஓராண்டு நிறைவு தினத்தைக் கறுப்பு தினமாக எதிர்க்கட்சிகள் கடைபிடித்துப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சிம்பு பாடிய இந்தப்பாடல் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது.

அந்தப்பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

பாடல் வரிகள்……

காந்தி நோட்டு ரெண்டும் அம்பேல் ஆகி போயாச்சு

வாழ்க்கை ஏடிஎம்மில் அஸ்கு புஸ்கு ஆயாச்சு

சோக்கா சொக்கா மாட்டி நடுத்தெருவில் வந்தாச்சு

காத்துக் கிடந்த ஜனம் காக்கா கூட்டம் போலாச்சு

நடுத்தரத்த.. நல்லா வச்சு செஞ்சாச்சு…

சில்லறைக்குதான் டங்குவாரு அந்தாச்சு

மலை மலையா மோசம் செஞ்ச மூதேவிங்க

பாரீ…னுதான் போயாச்சு

நோ கேஷ்… கார்டை ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்

நோ கேஷ்… கேள்வி கேட்காம கொண்டாடலாம்

நோ கேஷ் நோ கேஷ் நோ கேஷ்

பண்ட பரிமாற்றம் பழகிக்கலாம்

கண்ணே தொறக்காம படம் பார்க்கலாம்…

ஃபேக்கு நோட்டு போல் வாழ்க்கை மாறிப் போயாச்சு

பிரேக்கிங் நியூஸப் பாத்து

லூசு மோஷன் ஆயாச்சு

வெள்ள மனசு சேத்த பணம்

செல்லாமலேயே போயாச்சு

கருத்த மனசு சேத்த பணம்

வெள்ளை கலர் ஆயாச்சு

குடிமகனா ஒத்துழைப்ப தந்தாச்சு

கண்டபடிக்கு நம்பிக்கையா வச்சாச்சு

வரிசையில பெரிசு சிறுசு எல்லாருமே நின்னாச்சு

முடிஞ்சுதுனு நெனச்சாக்கா ஜிஎஸ்டி வந்தாச்சு

நோ கேஷ்… கார்ட ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்

ஏழை வீட்டில் இருப்பதெல்லாம்

சிவப்பு பணமடா

குருவி போல சேத்த காசில் கள்ளம் இல்லடா

நாட்ட மாத்த வேணுமுனு

நீங்க நெனச்சா

கோட்டு போட்ட குண்டர்களின் சங்கப்புடிங்கடா

நோ கேஷ்… கார்டை ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்

நோ கேஷ்… கேள்வி கேட்காம கொண்டாடலாம்

பண்ட பரிமாற்றம் பழகிக்கலாம்

நோ கேஷ் நோ கேஷ் நோ கேஷ்

கண்ணே தொறக்காம படம் பார்க்கலாம்

டீமானிடைசேஷன் டீமானிடைசேஷன் டீமானிடைசேஷன்

மாறும்மா நம்ம நேஷன், கேள்வி கேட்டா போலீஸ் ஸ்டேஷன்

இது கோலுமாலு குளோபலைசேஷன் ஆயாச்சு

இது கோலுமாலு குளோபலைசேஷன்

இது கோலுமாலு குளோபலைசேஷன்

இது கோலுமாலு குளோபலைசேஷன்

ஒரே கன்பியூஷன்…. என்ன வாழ்க்கைடா இது.

மேற்கண்ட வரிகளில் சிம்பு பாடிய பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

இப்பாடலை சிம்பு பாடியிருப்பதால் பாஜக கட்சியினர் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்போவதாகத் தகவல் பரவியது. இதனால் சிம்பு வீட்டுக்குக் காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டிருக்கிறது.

இதுபற்றி, சமூகவலைதளங்களில் கருத்துத்தெரிவிக்கும் அவரது ரசிகர்கள், சிம்பு எதையும் எதிர்கொள்வார் ஆகவே யாரும் கவலை கொள்ளவேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Leave a Response