
நடிகர் அரவிந்த் ஆகாஷை பொறுத்தவரை அவர் தனி ஹீரோவாக நடித்த படங்களை விட, நான்கு பேரில் ஒருவராக, பத்து பேரில் ஒருவராக மற்றவர்களுடன் இணைந்து நடிக்கும் படங்கள் தான் அவருக்கு கைகொடுக்கின்றன.. சென்னை-28, கோவா, மங்காத்தா ஆகிய படங்களை பார்த்தாலே அது புரியும்.. சமீபத்தில் ‘குற்றம்-23’ படத்தில் மிக முக்கியமான வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார் அரவிந்த் ஆகாஷ்.
இந்தநிலையில் அரவிந்த் ஆகாஷுக்கு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து ‘காலா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.. இந்தப்படத்தில் மகாராஷ்டிரா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அரவிந்த் ஆகாஷ். படத்தில் இவரது பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்… ஆம்.. ரஜினியின் ஒரிஜினல் பெயரைத்தான் இவரது கேரக்டருக்கு வைத்துள்ளாராம் பா.ரஞ்சித்.


