ஈழத்தில் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக தொடரும் போராட்டங்கள்


வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக வடமாகாண சபை உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு எதிராக வடக்கு பூராகவும் போராட்டங்களுகளும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.

இன்று((17.6.17) முல்லைத்தீவில் சுற்றுவட்ட வீதியில் இருந்து பேரணியாக சென்ற மக்கள் கூட்டம் கச்சேரிக்கு முன்பாக தமிழரசு கட்சிக்கு எதிராகவும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில் ”உங்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி நாங்கள். உங்கள் முடிவே எங்களின் முடிவு. உங்களின் சார்பாக விக்னேஸ்வரனுக்கு துணை நிற்போம்” என்று கூறினார்.

Leave a Response