
தாராபுரம்,மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெற குறிப்பிட்ட தொகுதி வாக்காளர்களுக்கு அதிகமாக பணம் வழங்குவது தவெகதான் என்று மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டி இருக்கிறார்.
தூயசக்தி என்று சொல்லி பணம் கொடுக்காமல் கடந்த தேர்தலைச் சந்தித்தது தவெக.ஆனால் இந்த இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மக்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது.நேர்மையாகத் தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் வாக்குரிமையைப் பறித்திருக்கிறது என்றும் பெ.சண்முகம் சாடி உள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம்….
உள்ளபடியே மதுராந்தகத்தில் தவெகவினர்தான் ஓட்டுக்கு அதிகப் பணம் கொடுக்கின்றனர்.நாங்கள் அங்கு பிரசாரத்துக்கு சென்றபோது நோட்டீஸ் கொடுத்து வாக்கு கேட்டோம்.அப்போது வாக்களிக்க சிலர் பணம் கொடுக்கிறார்கள்,நீங்கள் பணம் கொடுக்கவில்லையே என்று சில கிராமமக்கள் என்னிடம் கேட்டார்கள்.எந்தெந்தக் கட்சி எல்லாம் பணம் கொடுத்தார்கள் என்று கேட்டபோது, தவெகவினர்தான் ஓட்டுக்கு அதிகப் பணம் கொடுத்ததாக சொன்னார்கள்.
தூயசக்தி நாங்க ஓட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டோம்னுதான் கடந்த தேர்தலில் விஜய் பிரசாரம் செய்தார். இப்பவும் அதையேதான் சொல்றார்.ஆனால் நான் மேலே சொன்னது மதுராந்தகம் வாக்காளர்கள் கொடுத்திருக்கும் வாக்குமூலம்.தவெக அதிகப் பணம் கொடுத்திருக்கிறார்கள்,நீங்கள் கொஞ்சமாவது கொடுங்கள் என்று மக்கள் எங்களிடம் பேரம் பேசும் நிலையை தவெகவினர் ஏற்படுத்தியிருக்கிறார்கள்
இவ்வாறு பெ.சண்முகம் கூறியுள்ளார்.
அவருடைய வெளிப்படையான குற்றச்சாட்டு ஒரு பெரும் சான்றாக அமைந்திருக்கிறது என்கிறார்கள்.


