நவம்பர் 18 இல் விஜயபாஸ்கர் கைது?

அதிமுக ஆட்​சிக் காலத்​தில் சுகாதா​ரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்​கர் மீது வரு​மானத்​துக்கு அதி​க​மாகச் சொத்து சேர்த்​தது மற்​றும் குட்கா முறைகேடு தொடர்​பாகப் புகார்​கள் எழுந்​தன.

இதனடிப்​படை​யில்,2021 ஆம் ஆண்டு இலஞ்ச ஒழிப்​புத்​துறை அதி​காரி​கள் விஜயபாஸ்கருக்​குச் சொந்​த​மான
இடங்​களில் சோதனை நடத்​தினர்.அதைத்தொடர்ந்து,அமலாக்​கத்துறையும் விஜயபாஸ்கர் மற்​றும் அவரது மனைவி ரம்​யாவிடம் விசா​ரணை நடத்தி வந்தது.இந்​நிலை​யில்,ரூ.35.79 கோடி சொத்​துக்குவிப்பு வழக்கு தொடர்​பான
விசா​ரணைக்கு நவம்பர் 6 ஆம் தேதி நேரில் வர விஜயபாஸ்​கர் மற்​றும் அவரது மனைவிக்​கு அமலாக்​கத்துறை அழைப்பாணை அனுப்​பி​யிருந்​தது.

ஆனால்,அப்போது இருவரும் போகவில்லை.இதுகுறித்து இரு​வரிடமும் அமலாக்​கத்துறை விளக்​கம் கேட்​டுப்
பெற்​றதாகக் கூறப்​படு​கிறது.

இதனைத் தொடர்ந்து,விஜயபாஸ்​கர் நவம்பர் 18 ஆம் தேதி​யும், அவரது மனைவி 19 ஆம் தேதியும் நேரில் வருமாறு அமலாக்கத்துறை மீண்​டும் அழைப்பாணை அனுப்பியுள்​ள​தாகத் தகவல் வெளியாகி​யுள்​ளது.

இம்முறை இருவரும் நேரில் சென்று விடுவார்​கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.ஏனெனில்,இப்போது விஜயபாஸ்கர் ஆளும் தவெகவில் இருக்கிறார்.அவர் விசாரணைக்குச் செல்லாதது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியிருக்கிறது என்பதால் அவரை விசாரணைக்குப் போகச் சொல்லி ஆளும்கட்சி தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதென்கிறார்கள்.

இன்னொருபுறம்,விஜயபாஸ்கர் நேரில் செல்லும்போது அவரை அமலாக்கத்துறை கைது செய்யும் வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால்,புதுக்கோட்டை மற்றும் ஆளுங்கட்சி வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response