கதறும் நிலையில் விஜய் – உதயகுமார் பேச்சு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், நேற்று வெளியிட்டுள்ள காணொலி பதிவில்….

முதல்வர் விஜயின் பிரசாரத்தில்,அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு தவெகவில் தஞ்சம் புகுந்த வேட்பாளர், தாராபுரம் தொகுதி மக்களை அடிமையாக்க ஒரு நீலிக்கண்ணீர் நாடகத்தை அரங்கேற்றிள்ளார்.இந்த நம்பிக்கை துரோகத்தை,பச்சை துரோகத்தை திசை திருப்புன்ற வகையில்தான் அழுகை நாடகத்தை மேடையில் அரங்கேற்றி, அதற்கு முதல்வர் விஜய் ஆறுதல் கூறுவதாக,இத்துரோகத்துக்கு துணை போன முதல்வர்,தன்னை நிரபராதியாகக் காட்டிக் கொள்கிறார்.

அதிமுகவில் அதிகாரத்தைச் சுவைத்துவிட்டு இங்கிருந்து சென்ற இந்த காலாவதியானவர்களால் நாட்டுக்கு எந்த நலனும் இருக்காது.அதிமுகவைக் காத்து நிற்கவேண்டிய நேரத்தில்,கட்சியை காவு வாங்கத் துடிக்கிற விஜய்க்கு சிலர் துணை போகிறார்கள்.தற்போது விஜய்யின் பக்கம் அரசியல் காற்று வீசலாம்,எப்போதும் காற்று ஒரே திசையில் வீசாது.காற்றின் திசை மாறும்போது,ரீல்ஸ் மோகத்தால் கட்டமைக்கப்பட்ட விஜய்யின் மாயபிம்பம், உண்மைமுகம் அப்போது உலகிற்கு தெரியவரும்.அப்போது தீர்ப்புகள் திருத்தி எழுதப்படும்.

அதற்கு தாராபுரம் இடைத்தேர்தல் முடிவே அடித்தளமாக அமையும்.அதிமுக தண்ணீரில் கரைந்து போகிற உப்பல்ல.அது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த தங்கப்புதையல்.ஓராயிரம் விஜய் வந்தாலும்,அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது‌.இக்கட்சி சர்க்கரை கரைசலோ,உப்பு கரைசலோ அல்ல,அதிமுக எதிரிகளுக்கு இரும்பாகவும், தொண்டர்களுக்கு தங்கமாகவும்,மக்களுக்கு மாணிக்க,வைரக் கற்களாகவும் பயன்படக்கூடிய இயக்கம்.

நேற்றைய விபத்தில் அதிகாரத்திற்கு வந்த விஜய்,உங்களின் அப்பா,தாத்தா வந்தாலும்,கடைசி தொண்டன் இருக்கும்வரை எத்தனை நரித்தனத்தை,நயவஞ்சகத்தை கையாண்டாலும்,அதிமுகவில் உங்கள் பாச்சா பலிக்காது. அதிமுகவை ஏன் தொட்டோமென கதறுகிற நிலை ஒருநாள் விஜய்க்கு வரும்.ஓடுகாலிகளும் உங்களை விட்டு ஓடுவார்கள்.அந்தக்காலத்தை எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மாக்களும், தமிழக மக்களும் உருவாக்குவார்கள்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Leave a Response