சத்தியபாமாவுக்கு சவுக்கடி கொடுங்கள் – பிரேமலதா ஆவேசம்

திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தாராபுரம் மூலனூர் நால்ரோடு பகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று மாலை பரப்புரை செய்தார்.அப்போது அவர் பேசியதாவது….

ஏற்கனவே போட்டியிட்டவர்கள் இறந்து போனால்தான் இடைத்தேர்தல் வரும்.நியாயம் இறந்துவிட்டது.அந்த துரோகத்தால்தான் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.சுயநலத்திற்காக வேறு கட்சிக்குச் செல்கிறீர்கள் என்றால் மக்கள் 6 ஆம் தேதி போடும் ஓட்டில் சவுக்கடியை வழங்கவேண்டும்.தவெக வேட்பாளர் சத்தியபாமா வாக்காளர்களுக்கு சத்தியமாக இல்லை.

அதனால்தான் ஓட்டு கேட்க விடாமல் மக்கள் விரட்டி அடிக்கின்றனர்.ராஜ்மோகன் வந்து காதில் பேசியதும் ஸ்டார்ட் கேமரா ஆக்சன் என சினிமா போல சத்தியபாமா நடித்து விட்டார்.மக்களுக்கு துரோகம் செய்துவிட்டேன் என அழுதாரா? அல்லது வேறு ஏதாவதா? என அவருக்குத்தான் தெரியும்.இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதியை முன்னேற்ற மக்களுக்கு என்ன செய்வோம் என சொல்லவேண்டும்.

ஆனால்,ஆதவ் அர்ஜுனா கேப்டன் ஆத்மா என பேசுகிறார்.ஆதவ் அர்ஜுனாவிற்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.பத்திரிகையாளர்கள் கேட்டதால் சொல்கிறேன்‌ இல்லை என்றால்,இதையெல்லாம் லெப்ட் ஹேண்டில் தட்டிவிட்டுச் செல்வேன்‌.கேப்டனை பற்றிப் பேச நீ யார்?.நீ என்றாவது அவரை பார்த்துள்ளாயா? சினிமாவுல ஸ்கிரீன்ல வேண்டுமானால் பார்த்திருப்பார்.

கேப்டன் குடும்பத்திற்கும்,கேப்டன் கட்சிக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள்,விஜயகாந்த் ஆன்மா பற்றிப் பேசத் தகுதி இல்லாதவர்கள்.அவர் மந்திரி இல்லை.அவர் முந்திரி.தேமுதிக கட்சிதான் அவர் ஆன்மா.அதனால,ஏதோ வாய்க்கு வந்ததை பேசணும்னு பேசக்கூடாது.தம்பி ஆதவ் அர்ஜூனா,இதோட அதைப்பற்றிப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.நீங்கள் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.விஜய் தம்பிக்கு வேண்டுமானால் கேப்டனை தெரியும்.மற்ற யாருக்கும் பேச அருகதை‌ இல்லை.

பாஜவின் கிளைக்கழகம்தான் தவெக என முதல்வரே ஒப்புக்கொண்டார்.எந்த அறிவிப்பு வந்தாலும் முதல்வர் உடனடியாக வாபஸ் வாங்கி விடுவார்.உங்களுக்கு சொல்புத்தி செயல்புத்தி இல்லையா? அறிவிக்கும் முன் பார்க்க மாட்டீர்களா? அடுத்தவர் எழுதிக் கொடுத்ததை வாசிக்காதீர்கள்.உங்களை மாட்டிவிட்டுச் சென்று விடுவார்கள். விலைவாசி உயர்ந்துவிட்டது.பாலியல் குற்றங்கள்,சட்டம் ஒழுங்கு சீர்கேடு,மின்கட்டண உயர்வு,மின் வெட்டு என இவற்றைப் பற்றிப் பேசாமல் பக்கம் பக்கமாக வசனம் பேசிச் செல்கிறார்.

மக்களை முட்டாளாக்க நினைப்பவருக்கு உங்கள் வாக்கு மூலம் பதில் அளியுங்கள்.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.ரூ.2500 கொடுங்கள்.6 சிலிண்டர்கள் கொடுங்கள்.மக்கள் வெள்ளம் என்ன கரைபுரண்டு ஓடுகிறதா? ஏர்போர்ட்டில் இருந்து இதுவரை பேரிகார்ட் யார் பணத்தில் அமைக்கிறார்கள்.இப்போது 10 இலட்சம் கோடி கடனில் உள்ளோம்.கடன் சுமையை குறைக்க வேண்டியவர் கடனை ஏற்றி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response